சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில்  மூத்த அதிமுக தலைவர்கள் சந்தித்தனர்.  அப்போது,  திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், ஊழல் தொடர்பான ஆதாரங்களை அளித்து, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், , தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரும் இருந்தனர்.

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் திமுக அரசுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை அடங்கிய மனுவை, இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி வழங்கியதாக தெரிகிறது.  அந்த மனுவில், திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், ஊழல் தொடர்பான ஆதாரங்களை அளித்து, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை வரும் 20-ஆம் தேதி கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் உரையுடன் இந்த சட்டசபை கூடுவது வழக்கம். இத்தகைய சூழலில், எடப்பாடி பழனிசாமி தமிழக கவர்னரை சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பின்னர் ஆளுநர் மாளிகை வாசலில்  செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, ஊழல் பட்டியலை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

“நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ. 64,000 கோடி

ஊரக வளர்ச்சித் துறையில் ரூ. 60,000 கோடி

சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையில் ரூ. 60,000 கோடி

எரிசக்தித் துறையில் ரூ. 55,000 கோடி

டாஸ்மாக் துறையில் ரூ. 50,000 கோடி

பத்திரப் பதிவுத் துறை ரூ.20,000 கோடி

நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 20,000 கோடி

நீர் ஆதாரத் துறையில் ரூ. 17,000 கோடி

சென்னை மாநகராட்சியில் ரூ. 10,000 கோடி

தொழில்துறையில் ரூ. 8,000 கோடி, பள்ளிக் கல்வித் துறையில் ரூ. 5,000 கோடி

மக்கள் நல்வாழ்வுத் துறையில் ரூ. 5,000 கோடி

வேளாண்மைத் துறையில் ரூ. 5,000 கோடி

சமூக நலன் துறையில் ரூ. 4,000 கோடி

உயர்க்கல்வித் துறையில் ரூ. 1,500 கோடி

இந்து சமய அறநிலையத் துறையில் ரூ. 1,000 கோடி

ஆதிதிராவிடர் நலத் துறையில் ரூ. 1,000 கோடி

சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறையில் ரூ. 750 கோடி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் ரூ. 500 கோடி

சிறைத் துறையில் ரூ. 250 கோடி

பால்வளத் துறையில் ரூ. 250 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது” என்று  கூறினார்.

[youtube-feed feed=1]