சென்னை: தேர்தலின்போது ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டத தொடர்பான வழக்கின் விசாரணைக்கு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகும்படி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம், நெல்லை மாநில பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின்போது, ஏற்கனவே விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் விசாரணை தேவையற்றது என எஸ்.ஆர்.சேகர் தரப்பில் வாதாடப்பட்டது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராவதில் என்ன தயக்கம் ? என கேள்வி நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதையடுத்து வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே பாஜக அமைப்புச் செயலாளர் ஆஜராகி உள்ளார் என கூறினார். மேலுமை, தற்போது அவரது தொலைபேசி உரையாடல் குறித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற நீதிபதி, பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டார்.