புதுடெல்லி:
சுங்கச்சாவடிகள் மூலமாக தற்போது ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், சுங்கச்சாவடிகள் மூலமாக ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில், இது ரூ.1.25 லட்சம் கோடியாக உயரும். இந்தியாவில் 81% லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்குகிறோம். லித்தியம் அயனுக்கு மாற்றாக எனது அமைச்சகம் இன்று முன்முயற்சி எடுத்து வருகிறது. அரசு ஆய்வகங்கள் தொடர்பான அனைத்தும் ஆராய்ச்சி நடந்து வருகின்றன. ஹைட்ரஜன் எரிபொருள் கலங்களை உருவாக்க அமைச்சகம் முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாற்று எரிபொருளுக்காக நாடு செல்ல வேண்டிய நேரம் இது என்பது எனது பரிந்துரை. இந்தியாவில் உபரி மின்சாரம் இருப்பதால் நான் ஏற்கனவே மின்சாரத்தை எரிபொருளாக்க பிரச்சாரம் செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.