சென்னை: சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.350 கோடி ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்டதாக வரி ஆலோசகர் உட்பட 7 பேரை ஜிஎஸ்டி ஆணையரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மத்தியஅரசு அமல்படுத்தியுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) காரணமாக மக்களுக்கு தேவையற்ற செலவும், வணிக நிறுவனங்களுக்கு தொந்தரவும் அதிகரித்து வருகின்றன. கொரோனா காலக்கட்டத்திலும் ஜிஎஸ்டி வரி குறித்து தாக்கல் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்று தொந்தரவு செய்வதுடன், அந்த காலக்கட்டத்துக்கு அபராதமும் வசூலித்து வருகின்றனர். இதனால், சாமானிய வியாபாரிகள், ஜிஎஸ்டியால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், ஜிஎஸ்டி வரித்தொல்லையில் இருந்து தப்பிக்கும் வகையில், பலர் மோசடியில் ஈடுபடுவதும் தொடர்கிறது.
அதன்படி சென்னையில்,போலி நிறுவனங்கள் மூலம் சிலர் வரி மோசடி செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்த சென்னை ஜிஎஸ்டி ஆணையரகத்தின் அதிகாரிகள் விசாரணை நடத்தில், 24 போலி நிறுவனங்களின் பெயரிலான போலி ரசீதுகள் மூலம் ரூ.299 கோடியும், இதர நிறுவனங்களுக்கு சட்டவிரோத உள்ளீட்டு வரி கடன் வழங்கியதன் மூலம் ரூ.53.35 கோடியும் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வரி ஆலோசகர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் பி.ஜெயபாலசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜிஎஸ்டி மோசடிக்காகவே தொடங்கப்பட்ட இந்த போலி நிறுவனங்கள், சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்காமலேயே போலி ரசீதுகளை பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளன.
வரி செலுத்துபவர்கள் ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற, சென்னை அண்ணா நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் செயல்படும் உதவி மையத்தை நேரடியாகவோ, 044-26142850 மற்றும் 26142852 என்ற தொலைபேசி எண்கள், Sevakendra-outer-tn@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். 044-26207700 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் விவரம் அறியலாம்.