டில்லி:
ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கிய முறைகேட்டில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தாகோச்சார் மீது சிபிஐ இன்று முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. அதுபோல அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தி வருகிறது.
இந்த முறைகேடு தொடர்பாக சந்தா கோச்சாரின் கணவரும் ‘என்யூபவர்’ என்ற நிறுவனத்தின் தலைவருமான தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் முதலீடு செய்தார். இதற்கு பிரதி உபகாரமாக சந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்துக்குக் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.3,200 கோடி கடன் வழங்கி உதவி செய்தார்.
இந்தக் கடன் வழங்கிய விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பது வெளியே கசிந்தது. 2017-ம் ஆண்டுவரை இந்தக் கடனில் 85 சதவீதத்தை வீடியோகான் நிறுவனம் திருப்பிச் செலுத்தாமல் வாராக்கடனாக மாறியது.
வீடியோகான் நிறுவனத்திற்கு 1,875 கோடி ரூபாய் முறைகேடாக வங்கிக் கடன் வழங்கியதற்கு லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.
விசாரணையின்போது, வங்கிக்கடன் முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது. அதுபோலவே அமலாக்கதுறை திரட்டிய ஆவணங்களை வைத்து அதுதொடர்பான விளக்கங்களையும் கேட்டனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (Prevention of Money Laundering Act-PMLA) குற்றம் சாட்டப் பட்டுள்ள சந்தா கோச்சார், அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு அளிக்கும் பதில் அளிக்க வேண்டியது அவசியமாகும். அவர் அளிக்கும் பதில்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த மார்ச் 1ம் தேதியன்று சந்தா கோச்சாரின் வீடு, அவருடைய கணவர் தீபக் கோச்சார் மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோரின் நிறுவனங்கள், தீபக் கோச்சாரின் தொழில் கூட்டாளியான வேணுகோபால் தூத்தின் வீடியோகான் அலுவலகத்திலும் மத்திய அமலாக்கத் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.
அதில் நடத்திய ஆய்வில், சந்தா கோச்சர் குடும்பத்தினர் சிஎப்எல் எனப்படும் (Credit Finance Limited ) பைபான்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தததும், அந்த நிறுவனத்தின் 60 சதவிகித பங்குகள் அவர்களி டம் இருந்ததும் தெரிய வந்தது. மேலும், வீடியோகான் நிறுவனத்தினம் 24.7 சதவிகிதசேர்களும் மற்ற பங்குகள் சிலரிடம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு சந்தா கோச்சார் ஐசிசிஐ வங்கியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, சிபிஎல் நிறுவனத்தின் தலைவராக சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் பதவி எற்றார் என்று தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவரிடம் விசாரணை நடத்தினர்.