எலக்ஷன் கமிஷன் எலக்ஷன் ஒமிஷன் ஆக மாறிவிட்டது: காங்கிரஸ் கடும் சாடல்

Must read

டில்லி:

தேர்தல் ஆணையத்தில்,ஆணையர்களுக்குள் ஏற்பட்டுள்ள மோதல், ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு கறுப்பு நாள் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது.

தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை ஆய்வு செய்து வந்த தேர்தல் ஆணையர்கள் 3 பேரில் தலைமை தேர்தல்ஆணையர் அரோ மற்றும், சுஷில் சந்திர ஆகிய 2 பேர் மோடி மற்றும் அமித்ஷா வுக்கு ஆதரவாகவே  செயல்பட்டதால், தேர்தல்ஆணையர் லவசாவின் புகார் மீதான ஆய்வு அறிக்கையை ஏற்க மறுத்தனர். இதன் காரணமாக இனிமேல் தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் தலைமை தேர்தல்ஆணையருக்கு லவசா கடிதம் எழுதினார். இந்த விவகாரம் வெளியானதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

தேர்தல் முடிய இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளது. அதுபோல புதிய அரசு அமைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையர்களின் குடுமிபிடி சண்டை வெளிப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிங்தவாலா,   மோடி ஆட்சியில் தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை சிறுக, சிறுக அரிக்கும் போக்கு ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும்,  முதலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெளிப்படையாக குறை கூறினார்கள், அடுத்ததாக ரிசர்வ் வங்கி ஆளுநரின் ராஜினாமா, தொடர்ந்து சிபிஐ இயக்குநர் பதவி நீக்கம், தற்போது தேர்தல் ஆணையத்தில் பிரிவினை.

மோடி ஆட்சியில் நாட்டின் உயர்ந்த அரசுத் துறைகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில்,தற்போது தேர்தல் ஆணையத்தில் ஏற்பட்டுள்ள பிரிவினை  ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட மற்றொரு கருப்பு நாள் என்று விமர்சித்துள்ளார்.

மேலும், ‘தேர்தல் முடிவுக்கு வந்து விட்டது  மோடி அரசாங்கத்தின் 5 ஆண்டுகால ஆளுமை ஆட்சியை தூக்கியெறிவதற்கு  இன்னும் 5 நாட்களை மட்டுமே எண்ண வேண்டும்!

மோடி அரசு மீதான தேர்தல் அறிக்கை தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை சேதப்படுத்துகிறது என்றும், தேர்தல் கமிஷன் தேர்தல் ஒமிஷன் ஆக மாறிவிட்டது என்றும் கூறி உள்ளார்.

More articles

Latest article