சென்னை: சென்னை  பாரிமுனை பகுதியில்  உரிய ஆவணங்கள் இன்றி ரூ.32 லட்சம் பணம்  எடுத்து சென்ற நபரை கைது செய்த காவல்துறையினர்,அவரிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.  இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சென்னை பாரிமுனையில்  சந்தேகத்திற்கிடமாக ஒருவர்  கையில் பையை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றியதாக கூறப்படுகிறது.  பின்னர், அவர் அங்கிருந்த இந்தியன் வங்கி அருகே வந்து நின்றுகொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை மடக்கி விசாரித்தனர்.

அப்போது அவரது பெயர்,  கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அமானுல்லா என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையில் சோதனை நடத்தப்பட்டபோது, அதில்  ரூ.21 லட்சம் பணம் இருந்ததைக கைது அதிர்ச்சி அடைந்த போலீசாரி அவரை அழைத்துக்கொண்டு பூக்கடை போலீஸ் நிலையம் சென்றனர்.

அங்கு நடத்தி யவிசாரணையில், அமானுல்லா, தனக்கு பணம் தந்த முகமது ரிஸ்வான் என்று கூறினார். இதையடுத்து,  மண்ணடியைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் என்பவரை விசாரித்த போலீசார் அவரிடம் இருந்த  ரூ.11.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இருவரும், பணத்திற்கான எந்தவொரு ஆவனமும் கொடுக்கவில்லை. முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், இது ஹவாலா பணமாக இருக்கலாம் என சந்தேக்கிப்படுகிறது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களையும் பறிமுதல் செய்த  பணத்தை வருமான வரித்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.