சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.32.47 கோடி சொத்து சேர்த்துள்ளதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மீது க லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்துள்ளது.
ஏற்கனவே அவர்மீது, ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பு அனுமதிக்கு ரூ.27.9 கோடி லஞ்சம் வாங்கியதாக ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப் பட்ட நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2011 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில், அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் வருமானத் துக்கு அதிகமாக ரூ.32.47 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்தை விட 1057% கூடுதலாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. லஞ்சமாக பெற்ற பணத்தைக்கொண்டு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது மனைவி, மகன்கள் பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தஞ்சை ஊழல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர், வைத்திலிங்கம், அவரது மகன்கள் உள்பட 11 பேர் மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 2 தினங்களுக்கு முன்பு இதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.