சென்னை:

மிழகத்தை சூறையாடிச்சென்ற ஓகி மற்றும் கஜா புயல் பாதிப்புக்கே இன்னும் சரிவர நிவாரணம் வழங்காத மத்திய அரசு, இன்னும் கரையையே கடக்காத ஃபானி புயல் பாதிப்புக்காக ரூ.309.75 கோடி முன் உதவித் தொகை அறிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது மக்கள் விரோத மோடி அரசின் பித்தலாட்டம் என்று விமர்சிக்கப்படுகிறது.  கடந்த நான்கரை ஆண்டுகாலமாக தூங்கிக்கொண்டிருந்த மோடி அரசு, தேர்தல் நடைபெற்று வரும் நேரமான  தற்போதுதான் விழித்துக்கொண்டுள்ளதா என சமூக வலைதளங்களில் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாநிலங்களுக்கு முன்கூட்டியே  உதவித் தொகையை  மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இது விசித்திரமாகவும், வியப்பாகவும் உள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் இன்று அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புயல் தமிழக்ததை தாக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது திசை மாறி ஒடிசா நோக்கி செல்வதாக கூறப்படுகறது. சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. 36 மணி நேரத்தில் மிக அதி தீவிரப்புயலாக மாறி நாளை மாலை ஒடிசா கடற்பகுதியை ஃபானி நெருங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படி, தமிழகத்திற்கு ரூ.309.75 கோடி முன் உதவித் தொகையை விடுவிக்க உத்தரவிடப்பட் டுள்ளது. ஒடிசாவுக்கு ரூ.340 கோடி முன் உதவித் தொகையும், ஆந்திராவுக்கு ரூ.. 200.25 கோடி மற்றும் மேற்கு வங்கத்திற்கு 235.50 கோடி ஒதுக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

மத்திய அரசின் இந்த தாராளம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ல ஆயிரம் தென்னை, மா மரங்கள் போன்ற விவசாய பயிர்கள் நாசமாகின. வீடு, தொழில் ரங்கள், விளை நிலங்கள் அனைத்தும் பாழாகி போன நிலையில்,  கஜா புயல் நிவாரணமாக தமிழக அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

முதல்கட்டமாக இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு 1, 500 கோடி ரூபாய் கேட்டிருந்தது.

ஆனார்ல, மத்திய அரசோ மொத்ததிலேயே தமிழகத்துக்கு இடைக்கால நிவாரணமாக கோரிய அளவுகூட கொடுக்காமல்,  1,146 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியது.

இது மக்களிடையே பாஜக அரசு மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது தேர்தலை கருத்தில்கொண்டு, முன்பணமாக  ரூ.309.75 கோடி அறிவித்திருப்பது அரசியல் பித்தலாட்டம் என்று விமர்சிக்கப்படுகிறது..