சென்னை:  திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கி  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு,  மாநிலம் முழுவதும் நகர்ப்புறங்களில் பிரமாண்டமான நூலகங்களை கட்டி வருகிறது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவுசார் மையம் என பெயரிடப்பட்டு வருகிறது. அதன்படி,  திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, இந்த நூலகம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி, திருச்சியில்,  4.57 ஏக்கர் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட கட்டடமாக கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்பட உள்ளது.

ஏற்கனவே இதுகுறித்த சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்த நிலையில், தற்போது அதற்கான  நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம், அறிவுசார் மையம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு