சென்னை: நடப்பாண்டில் உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான ரூ.25ஆயிரம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.scholarships.gov.in என்ற தளத்தில் ஆகஸ்ட் 31க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பல நல திறன்கள் அளிக்கப்பட்டு வருகிறது வீட்டில் முதல் பட்டதாரிக்கு கல்வி உதவித்தொகைகள் அளிக்கப்படுகிறது. மேலும் பட்டியலின மக்கள் மட்டும் பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் போன்றவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் கவி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு முதல் அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பெறும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் ஊக்கம் பெற்று பள்ளி படிப்போடு நிறுத்தி விடாமல் தொடர்ந்து மேற்படிப்பை தொடர்கின்றனர்.
மாநில அரசுபோல மத்திய அரசும் உயர்கல்வி படிக்கும் மாணாக்கர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால், திறன் அடிப்படையில் ரூ.25ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பித்து தேர்வாகும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மத்திய அரசே நேரடியாக வழங்குகிறது.
உதவித்தொகை பெற விரும்புவோர் https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 12ம் வகுப்பு முடித்தவர்கள் நடப்பு ஆண்டு நவம்பர் மாதம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ம் ஆண்டு முதல் விண்ணப்பித்தவர்கள் கல்வி உதவி தொகை விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தல் ஆகிய நடைமுறை இணையதளத்திலேயே மேற்கொள்ளலாம்.