டெல்லி: கடந்த நிதியாண்டில் மதவழிபாட்டு தலங்களுக்கான நன்கொடை வசூல் ரூ.23.7 கோடி என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது. அதிகபட்சமான வசூல் தென்னிந்தியாவிலேயே வசூலாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலகிலேயே  அதிக நன்கொடைகளை பெறும் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில். பொதுமக்கள் கட்டுக்கட்டாக பணத்தையும், ஆபரணங்களையும் அங்குள்ள  உண்டியலில் கொட்டி தங்களது நேர்த்திக்கடனை செய்கிறார்கள்.  திருப்பதி வேங்டகவனின்  சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டது. தேசம் முழுவதும் பல இடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஏழுமலையான் பெயரில் உள்ளது. தற்போது பல மாநிலங்களில் ஏழுமலையான் கோவிலுக்கு கிளைக்கோயில்களும் கட்டப்பட்டு வருகிற்து.

இதையடுத்து கத்தோலிக்கர் திருச்சபையின் தலைமை பீடமான வாடிகன் சிட்டி இருக்கிறது. இங்கும் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இதன்மூலமே இந்த திருச்சபை பல நாடுகளில் கல்வி போதனை உள்பட பல்வேறு அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறது.

ஆனால், கேரளாவில்  திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாப சுவாமி ஆலயத்தின் பொக்கிஷங்களை பார்த்த பிறகு, இதுதான்  இது உலகிலேயே மிக அதிகமான செல்வ வளம் கொண்ட கோவிலா இருக்கும் என எண்ணப்படுகிறது.  இதன் சொத்து மதிப்பு: ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடியை தாண்டுவதாக சொல்கிறார்கள். இந்த 3 கோவில்கள் தான் உலகத்திலேயே செல்வ செழிப்பில் மிதக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவில் மத வழிபாட்டு தலங்களில் வசூலாகும் நன்கொடை குறித்து அசோக பல்கலைக்கழகம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2021-22ம் ஆண்டில் மட்டும் மதவழிபாட்டுத் தலங்களக்கு நன்கொடை மற்றும் காணிக்கையாக ரூ.23,700 கோடி இந்தியர்களிடம் இருந்து வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிக நன்கொடையானது தென்னிந்திய மாநிலங்களிலேயே உள்ளது என்றம், தென்னிந்தியர்கள்தான் அதிக நன்கொடைகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.