டில்லி:

கங்கா தூய்மை திட்டத்தின் ரூ.221.75 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ராஜ்யசபாவில் இன்று பேசுகையில்,‘‘தேசிய கங்கா தூய்மை திட்டத்துக்கு பொதுத் துறை நிறுவனங்கள், அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தனி நபர்கள் நன்கொடை அளித்துள்ளனர். தற்போது வரை இதில் வசூலாகியுள்ள ரூ.221.75 கோடி நிதியை தேசிய கங்கா தூய்மை திட்டத்துக்கு பயன்படுத்தப்படவில்லை’’ என்றார்.

இந்த நன்கொடை நிதியை கங்கா தூய்மை திட்டப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள 2014ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.