டில்லி:

தாஜ்மகாலில் சுற்றுலா பயணிகளுக்கு இனி சூரிய உதயத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே நுழைவு சீட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து கலாச்சார துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா லோக்சபாவில் இன்று பேசுகையில், ‘‘ தாஜ்மகாலின் திறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நுழைவு சீட்டு வழங்கும் அறை காலை சூரிய உதயத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு, சூரியன் மறைவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு மூடப்படும்.

இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும். முன்னதாக சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவுக்கு இடைப்பட்ட நேரத்தில் நுழைவு சீட்டு அறை திறக்கப்பட்டு வந்தது. சீசன் காலங்களில் தினமும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தாஜ்மகாலை சுற்றி பார்க்க வருகிறார்கள்’’ என்றார்.