சென்னை: மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி, நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.28,227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக, அமைச்ச்ர தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

* 11.19 சதவீதம் என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.

*  உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) செயல்படுத்த ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* நகராட்சி நிர்வாகத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.6,045 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செயல்பட்டு வருகிறது.

* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி!

* நீர்வளத்துறை – ரூ.10,076 கோடி

*  மின்சாரத்துறை – ரூ.18,091 கோடி

*  போக்குவரத்துத்துறை – ரூ.13,062 கோடி

*  உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு ரூ. 17,088 கோடி ஒதுக்கீடு.

*  நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.21,132 கோடி நிதி ஒதுக்கீடு.

*  உணவு பாதுகாப்புத்துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்கீடு.

*  சுற்றுலாத்துறைக்கு ரூ.1394 கோடி ஒதுக்கீடு.

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,634 கோடி ஒதுக்கீடு.

* சென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் – சுங்குவார்சத்திரம், கோயம்பேடு – ஆவடி மெட்ரோ வழித் தடங்களுக்கு கொள்கை ரீதியான ஒப்புதல்.

* 5 ஆண்டுகளில் 38 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,397 கோடியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

* மதுரை மத்திய சிறையை வேறு இடத்திற்கு மாற்றி புதிய சிறை அமைக்க ரூ.229 கோடிக்கு ஒப்புதல்

* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டுகின்றன.

* தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கொரோனா பெருந்தொற்றை தி.மு.க. அரசு பேராற்றலுடன் சமாளித்தது.

* காவிரி, வைகை ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு பூங்காக்கள் அமைக்க ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர்.

* முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தில் இதுவரை 6,374 கோடி ரூபாய் மக்களுக்கு செலவிடப்பட்டுள்ளது.

* புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 79.17 லட்சம் பேருக்கு செய்யப்பட்டசோதனையில் 1,929 நபர்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

* மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 36 லட்சத்திற்கு அதிகமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

* 12.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

* 40 புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம் அமைக்க ரூ.291 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பட்டாசு தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை உதவித்தொகை தரப்படுகிறது.

* திருச்சி, மதுரை, ஓசூரில் ரூ.1070 கோடி மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன.

* இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டிற்கு பதக்கம் பெற்றுத் தந்த 5403 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.176 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது.

* 5 ஆண்டுகளில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மூலம் ரூ.101 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

* 1.14 லட்சம் வீடுகள் ரூ.969 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டுள்ளன.

* கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 20,484 கி.மீ. சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

* ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.28,687 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கடந்த 5 ஆண்டுகளில் 87 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

* 40 ஆண்டுகளுக்கு மேலான கூட்டுக் குடிநீர் திட்டங்களை புதுப்பிக்க ரூ.809 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நதிக்கரை மேம்பாட்டிற்காக ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*  “19 முக்கிய கோயில்களில் ரூ.1770 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன”

* தமிழ்நாடு கோயில்களில் ரூ.8,100 கோடியில் திருப்பணிகள்

* 5 ஆண்டுகளில் ரூ.3,357 கோடியில் 246 மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்.

* பால்வளம் – பால் பண்ணைகள் ரூ. 758 கோடியில் நவீனமயமாக்கல்.

* கைத்தறி & துணிநூல் – ரூ. 20 கோடியில் 10 புதிய கைத்தறிப் பூங்காக்கள்!

* நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் 1 வீட்டிற்கு மானியம் ரூ.2,10,000 2,21,212 வீடுகள் கட்டப்பட்டுள்ளன,  பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு 58,211 வீடுகள் கட்டப்பட்டுள்ளன 53,227 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

* மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு, 2021-22-ம் நிதி ஆண்டில் 84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடானது, 2025-26 ஆம் நிதியாண்டில் 1433 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு

* முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் போன்ற அனைத்து சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ், 35.33 லட்சம் நபர்கள் பயனடைந்து வருகின்றனர். அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும், இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 5463 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]