சென்னை:  சென்னை விமான நிலையத்தில்  ரூ.22 கோடி மதிப்பிலான போதைபொருளுடன்  5 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ்நாட்டைச் சேர்ந்தா திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் உலக நாடுகளுக்கு போதைப்பொருட்கள் கடத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னை விமான நிலையில், ரூ.22 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் , நைஜீரியா, பிரேசில் நாடுகளைச் சேர்ந்த 4 பேர் உட்பட, மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கும்பலுக்கும் ஜாபர் சாதிக் கும்பலுக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே டாஸ்மாக் போதையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில், சமீப காலமாக  அதிக வீரியம் கொண்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே முன்னாள் திமுக நிர்வாகி உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினரும் ஆங்காங்கே வேட்டை நடத்தி பலரிடம் இருந்து ஏராளமான போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளதுடன், பலரையும் கைது செய்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே போதை பொருட்கள் கடத்தும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இதையும் கண்காணித்து போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது.

இந்த  நிலையில்,  வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.22 கோடி மதிப்புடைய, போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகளை, மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து, நைஜீரியா, பிரேசில் நாடுகளைச் சேர்ந்த 4 பேர் உட்பட, மொத்தம் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மும்பையில் இருந்து, சென்னைக்கு தனியார் பயணிகள் விமானத்தில் வந்த, நைஜீரிய நாட்டு இளம் பெண் உட்பட இரண்டு பேரை என்சிபி அதிகாரிகள் பிடித்து சோதனை நடத்தினர். அந்த நைஜீரிய பெண் அணிந்திருந்த, ஆடைக்குள் 1.8 கிலோ கோக்கையின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதோடு இருவரையும் கைது செய்து, சென்னை அண்ணா நகரில் உள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியைக நெதர்லாந்து நாட்டிலிருந்து, சரக்கு விமானம் மூலம் வந்த பார்சல் ஒன்றை, என்.சி. பி அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றி, சோதனை நடத்தினர். அந்தப் பார்சலில் 1.4 கிலோ போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதோடு அந்தப் பார்சலில் இருந்த முகவரியின் படி, புதுச்சேரி மற்றும் பெங்களூரில் இருவரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள். அதோடு பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் இந்த போதை கடத்தல் விவகாரத்தில் கைது செய்தனர். இந்த பிரேசில் நாட்டவரிடம் இருந்து, 15 கிராம் கோக்கையின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை அடுத்து என். சி. பி அதிகாரிகள் மொத்தம் ரூ. 22 கோடி மதிப்புடைய கொக்கையின் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, பிரேசில் மற்றும் நைஜீரியா நாடுகளைச் சேர்ந்த 4 பேர், இந்தியர் ஒருவர் ஆகிய 5 பேர்களை, மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர்கள் வெளிநாட்டில் இருந்து போதை போலவே கடத்தி உள்நாட்டில் விற்பனைகள் ஏற்பட்டது தெரிய வந்திருக்கிறது. முதற்கட்டமாக அவர்கள் பின்னணி குறித்து ஆய்வு மேற்கொண்ட நிலையில், அதற்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்களை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஜாபர் சாதிக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அடுத்த கட்ட விசாரணையை துவங்க உள்ளது

ரூ.2000 கோடி போதைபொருள் கடத்தல்: திமுக வெளிநாட்டு வாழ் அணி தலைவர் – படத்தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கம்!