சென்னை: சென்னையில் இயக்கப்பட்ட வரும் மாநகர ஏசி பேருந்துகள்  உள்பட அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் பயணம் செய்யும்   ரூ.2000 மாத கட்டணத்தில் புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், தற்போதே கடும் வெயில் கொளுத்துகிறது. இந்த நிலையில், பயணிகளின்  வசதிக்காக,  2 ஆயிரம் ரூபாய் மாத கட்டணத்தில் ஏசி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் பயணிக்கும் புதிய திட்டத்தை மாநகர போக்குவரத்து கழகம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

தற்போது சென்னையில் ஆயிரம் ரூபாய் மாத கட்டம் செலுத்தி பாஸ் வைத்திருக்கும் பயணிகள் ஏசி பேருந்து தவிர மற்ற அனைத்து பேருந்துகளிலும் பயணிக்கலாம். இந்த நிலையில், சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.2,000 கட்டணத்தில் மாதம் முழுவதும்  ஏசி உள்ளிட்ட அனைத்து வகையான பேருந்துகளிலும் பயணம் செய்யும் வகையில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த புதிய திட்டம், வரும் மே  மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக   தகவல் வெளியாகியுள்ளது.