புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தி உள்ள 42 ஆயிரத்து 357 கட்டிடத் தொழிலாளர்களுக்கு, அவர்களின் வைப்பு நிதியில் இருந்து 2 ஆயிரம் ரூபாய்  வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.
கொரோன பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து விதமான தொழில்நிறுவனங்கள், போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டுஉள்ளன. மக்கள் வீட்டை விட்ட வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கு காரணமாக, அன்றாடம் வேலைக்குச் செல்லும் கூலித்தொழிலாளர்கள், கட்டித்ததொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநகர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மத்திய மாநில அரசுகள் நிவாரணம் அறிவித்தாலும், அவை யானைப்பசிக்கு சோளப்பொறி போலவே உள்ளது.
இந்த நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,  கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில முதல்வர் நாராயணசாமி , “புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்” என்றார்.  ஏற்கனவே பொருளாதார இழப்பைச் சமாளிக்க ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் ஊரடங்கு காரணமாக மாநிலத்தின் வருவாய் குறைந்துள்ளது.
இருந்தாலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 42 ஆயிரத்து 357 கட்டிடத் தொழிலாளர்களுக்கு அவர்களின் வைப்பு நிதியில் இருந்து 2 ரூ.2,000 வழங்கப்படும்  என்று தெரிவித்துள்ளார்.