கொழும்பு,

ல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர மிரட்டல் விடுத்துள்ளார்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக அவ்வப்போது இலங்கை குற்றம் சாட்டி வரு கிறது. இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களையும் துப்பாக்கியால் சுட்டும், வலைகளை அறுத்தும் தொல்லை கொடுத்து வருகிறது.

ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் பலர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு இலங்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகளையும் இலங்கை கைப்பற்றி வைத்துள்ளது.

இதுகுறித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இலங்கை முரண்டு பிடித்து வருகிறது. இந்நிலையில், தற்போது இலங்கை மீன்வள துறை அமைச்சர்  மகிந்த அமரவீர, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த அபராதம் குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் வருகிற ஜூலை 6ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.