காந்திநகர்:
குஜராத் மாநிலத்தில் ரூ. 2.2 கோடி மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் இரு கட்டங்களாக நடக்கிறது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அங்கு அமலில் இருப்பதால் தேர்தல் ஆணைய பறக்கும் படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையின் போது மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘ 75 ஆயிரத்து 968 பாட்டில்களில் கொண்டு வரப்பட்ட ரூ.2.2 கோடி மதிப்புள்ள இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானமும், அவற்றைக் கொண்டு வந்த 5 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வாகனங்கள், கரோஜ் கிராமத்தில் இருந்து வந்தபோது போலீசார் மடக்கிப் பிடித்தனர். அந்த கிராமத்தில் பழைய இரும்புக் கடைக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்த ஒரு குடோனில் சட்ட விரோதமாக மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் வாக்காளர்களைக் கவருவதற்காக அரசியல் கட்சியினர் மதுபானங்களை கடத்தி வந்து பதுங்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]