திருவனந்தபுரம்

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் நடந்த தணிக்கையில் ரூ 186 கோடிக்கும் மேற்பட்ட தங்கத்திலான பொருட்கள் காணவில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஒரு தணிக்கைக்குழு அமைக்கப்பட்டது.  அந்த குழு வினோத் ராய் தலைமையில் தணிக்கை முடிந்து தனது அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்தது.

அந்த அறிக்கையில் சுமார் ரூ186 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலுள்ள நகைகள் காணவில்லை என சொல்லப்பட்டுள்ளது.  இந்த அறிக்கை மீதான விசாரணை தலைமை நீதியரசர் ஜே எஸ் கேஹர் தலைமையில் நாளை தொடங்கவுள்ளது.  கோடை விடுமுறை முடிந்து நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட முதல் வழக்கு இது.

அறிக்கையில் காணப்படுவதாவது :

அனைத்து ஒரிஜினல் ஆவணங்களும் தணிக்கைக் குழுவுக்கு அளிக்கப்பட்டன.  அதில் கண்டுள்ளபடி நகைகள், மற்றும் பொருட்கள் சரிபார்க்கப்பட்டன.   அவற்றில் முக்கியமாக சுவாமிக்கு நெற்றியில் சாற்றப்படும் நாமம் என்னும் ஆபரணத்தில் உள்ள 8 விலையுயர்ந்த வைரக்கற்கள் காணவில்லை.  மற்றும் ஆவணங்களில் சேதம் அடைந்தது என சொல்லப்படும் பொருட்கள் அனைத்துமே காணாமல் போனவைகளாகவே உள்ளது.  அந்த வைரங்களின் மதிப்பும் ஆவணங்களில் 70-80 வருடங்களுக்கு முன்பான மதிப்பாகும்.

ஆபரணங்கள் மற்றும் பொருட்களை பதியும் “முதல்படி ரெஜிஸ்டர்” என்பது மலையாளத்தில் உள்ளது.  அந்த ஆவணத்தை மாற்றி அமைத்தால்தான் பல பொருட்களின் தற்போதைய மதிப்பு தெரியவரும்.  கணக்கெடுப்பின் போது 263 கிலோ தங்கத்தினால் ஆன பொருட்கள் காணவில்லை.  இதில் 769 தங்கக் கிண்ணங்களும் அடங்கும்,  இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 186 கோடிக்கும் மேல் வரும்.  அது தவிர பழைய தங்கத்தை உருக்கி புதியதாக செய்ததில் 30% சேதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் சந்தேகத்துக்குரிய ஒரு விஷயம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் உள்ளது