0001 என்ற பேன்சி நம்பருக்காக ரூ. 15.44 லட்சம் செலவு செய்துள்ளார் சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் பிரிஜ் மோகன்.
சண்டிகர் யூனியன் பிரதேச பதிவு மற்றும் உரிமம் வழங்கும் துறை ஏப்ரல் 14 முதல் 16 வரை பேன்சி நபர்களுக்கான ஏலத்தை நடத்தியது.
378 பேன்சி நம்பர்களுக்கு ஏலம் நடைபெற்றது இதில் பதிவுத் துறைக்கு மொத்தம் 1.5 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.
இதில், CH-01-CJ-0001 என்ற எண் ரூ. 15.44 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக CH-01-CJ-0002 என்ற எண் 5.4 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
CH-01-CJ-0001 என்ற எண்ணை சண்டிகரைச் சேர்ந்த பிரிஜ் மோகன் என்ற தொழிலதிபர் ஏலம் எடுத்துள்ளார்.
இந்த எண்ணை தான் சமீபத்தில் 71,000 ரூபாய்க்கு வாங்கிய ஹோண்டா ஆக்டிவா டூ வீலருக்கு உபயோகப்படுத்தப் போவதாக தெரிவித்தார் பிரிஜ் மோகன் தெரிவித்துள்ளார்.
கார் வாங்கிய பின் இந்த எண்ணை தனது காருக்கு மாற்றிக்கொள்ளப் போவதாக கூறியுள்ள அவர் மாறுதலுக்கு கட்டணம் மிகவும் குறைவு என்று தெரிவித்தார்.
2012 ம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்.கிளாஸ் ரக சொகுசு கார் ஒன்றுக்காக ரூ. 26.05 லட்சம் ரூபாய்க்கு பேன்சி நம்பர் ஒன்று வாங்கப்பட்டதே தற்போது வரை அதிகத்தொகைக்கு ஏலம் போன எண்ணாக கூறப்படுகிறது.