புதுச்சேரி:

புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரூ.1500 நிதி உதவி அளிக்கப்படும் என  புதுச்சேரி அரசு அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதும் தமிழக மற்றும் புதுச்சேரி மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கி சிபிஎஸ்இ வஞ்சித்து உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்படும் மாணவர்களுக்கு உதவி பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் அரசும் நிதி உதவி அளித்து வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் இருந்த வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வை எழுத  செல்ல உள்ள மாணவர்களுக்கு ரூ.1500 நிதி உதவி அளிக்கப்படும் என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்து உள்ளது.

மேலும், முதலமைச்சர் அலுவலகத்தில் உரிய கடிதம் கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளது.