சென்னை: ஒன்றிய அரசும், இந்திய பிரதமரும் நமது கோரிக்கையை புறக்கணிக்கிறார்கள் என கூறிய முதல்வர் ஸ்டாலின், ரூ. 150 கோடியில் தங்கச்சிபடம் பகுதியில் மீன் பிடித் துறைமுகம் கட்டப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் புதிய பாம்பான் பாலம் திறந்து விழா நேற்று ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதை புறக்கணித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று பேரவையில், மத்திய அரசும், பிரதமரும் நமது கோரிக்கையை புறக்கணிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி உள்ளார்.
பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், முதலமைச்சர் ஸ்டாலின் விதி 100ன் கீழ் மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாடு மீனவர்கள் அதிக எண்ணிக்கையில் இலங்கை படையால் கைதுசெய்யப்படுவது கவலை அளிக்கிறது . இலங்கை சென்ற பிரதமர் கச்சத்தீவு, மீனவர்கள் கைது குறித்து பெரிய அளவில் முன்னெடுத்ததாக தெரியவில்லை என்று கூறினார்.
மீனவர்களுக்காக ரூ.52 கோடியில் சிறப்பு திட்டம் கொண்டு வரப்படுவதாகவும், கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட மீன்பிடி சார்ந்த தொழில்களுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.
தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.
7000 மீனவர்களுக்கு உபகரணங்களுடன் பயிற்சி அளிக்க ரூ.52 கோடி ஒதுக்கப்படும் எ
7,000 பேருக்கு கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதலுக்காக 14,000 பயனாளிகளுக்கு ரூ. 53 கோடியில் பயிற்சி வழங்கப்படும்.
வலைப்பின்னுதல், படகு கட்டுமானத் தொழில், கருவாடு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களுக்கு ரூ. 54 கோடியில் 21,100 பயன்பெரும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
15,300 மீனவர்களுக்கு மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை தயார் செய்ய பயிற்சி வழங்கப்படும்.
இத்திட்டங்களை கண்காணிக்கவும் ஒருங்கிணைக்கவும் திட்ட கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்படும்” என்று பேசினார்.
மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தெற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடல் நோக்கிச் செல்வதற்கு வழி வகை செய்யும் பொருட்டு தங்கச்சிமடம் பகுதியில் ரூபாய் 150 கோடி செலவில் மீன்பிடிதுறைமுகம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கானபணிகள் துவங்கும்.
60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாம்பன்பகுதியிலும் மற்றும் ரூபாய் 150 கோடிமதிப்பீட்டில் குந்துக்கல் பகுதியிலும் மீன்பிடிதுறைமுகப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ஏற்கெனவே நான் அறிவித்துள்ளேன். இவற்றைத் தவிர, பாக் வளைகுடா பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த சில புதிய வாழ்வாதாரத் திட்டங்களையும் செயல்படுத்திடபின்வரும் சிறப்பு திட்டங்களை அறிவிக்கின்றேன்.
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், விற்பனை தொடர்புடைய தொழில்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியுடன் தேவையான உபகரணங்கள் அளித்து தொழிலில் ஈடுபட சுமார் 7000 பயனாளிகளுக்கு ரூபாய் 52.33 கோடி செலவில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
கூண்டு முறையில் மீன் மற்றும் சேற்று நண்டு வளர்ப்பு, பதப்படுத்துதல், விற்பனைதொடர்புடைய தொழில்களை மீனவ சமுதாய மக்கள் மேற்கொள்ள ரூபாய் 25.82 கோடி செலவில் உபகரணங்கள் வழங்கி, தொடர்பணிகளும் மேற்கொள்ளப்படும்.
மீன் பதப்படுத்துதல், மீன் உலர்த்தும் தொழில்நுட்பங்கள், தொழில்நுட்ப உபகரணங்களை அளித்தல் மற்றும் பயிற்சிகள் வழங்கி மாற்றுத் தொழில் ஊக்குவிக்கப்படுத்தும் திட்டம் சுமார் 2500 மீனவ குடும்பங்களைச் சார்ந்தபயனாளிகளுக்கு ரூபாய் 9.90 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்க சுமார் 15 ஆயிரத்து 300 மீனவர்கள் மாற்றுத் தொழிலில்ஈடுபட ரூபாய் 20.55 கோடி செலவில் திட்டம்செயல்படுத்தப்படும்.
மீன் வளம் சார்ந்த மாற்று வாழ்வாதாரமான வலை பின்னுதல், வலை பழுதுபார்த்தல், படகுகட்டுமானத் தொழில் படகு பழுது பார்த்தல், கருவாடு தயாரித்தல், வண்ண மீன் தொட்டிகள்தயாரித்தல், படகு ஓட்டுநர் பயிற்சி, கடல்சிப்பிஅலங்கார பொருட்கள் தயாரித்தல் ஆகிய தொழில்கள் செய்ய ரூபாய் 54.48 கோடி மதிப்பீட்டில் சுமார் 20,100 மீனவர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
திட்ட கண்காணிப்பு பிரிவு அமைக்கப்படும்:
தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை, மீனவர்கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் போன்ற பல்வேறு அமைப்புகளும், அரசுத் துறைகளும் இணைந்து இத்திட்டங்களைச்செயல்படுத்தும். இந்தத் திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைக்க திட்ட கண்காணிப்பு பிரிவு (Project Monitoring Unit) உருவாக்கப்பட்டு, அதன் மூலம்திட்ட செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சி: நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை காத்து மேம்படுத்தும் பொருட்டு இந்திய பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பு செய்வதற்கு ஏதுவாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் ரூ.360 கோடி செலவில் செயல்படுத்தப்படும். மீனவர்களின் மற்ற வாழ்வாதாரத்திற்காக ரூ.216.73 கோடி செலவிடப்படும்.
மொத்தம் ரூபாய் 576.73 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களால் மன்னார் வளைகுடா பகுதியைச் சார்ந்த மாவட்டங்களின் மீனவர்கள் பெரிதும் பயனடைவார்கள், அவர்களுடைய வாழ்வாதாமும் மேம்படும். அதுமட்டுமல்ல, நமது மீனவ சகோதரர்களின் குடும்பத்தினர் கூடுதலான பணிகளும் செய்து கூடுதல் பொருளீட்டவும் வாய்ப்புகள் ஏற்படும்.
இவ்வாறு கூறினார்.