மதுரை: இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற ரூ.14,000 கோடி செலவு பிடிக்கும், இது 17 லட்சம் குழந்தைகளுக்கு 30 ஆண்டுகளின் காலை உணவு திட்டத்துக்கு ஆம் செலவு என மதுரை  எம்பி சு.வெங்கடேசன்  டிவிட் பதிவிட்டுள்ளார்.

இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு ஆயுதமாகி வருவதாக கூறப்படுகிறது. இதற்கான மசோதா நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், டெல்லியில் நடைபெற உள்ள  ஜி20 உச்சி மாநாடு தொடங்கும் 9-ம் தேதி இரவு அன்று விருந்தினர்களுக்கு அளிக்கப்பட உள்ள குடியரசு தலைவர் விருந்து தொடர்பான அழைப்பிதழ்களில்,   வழக்கத்துக்கு மாற்றாக ‘இந்திய குடியரசு தலைவர்’ என்பதற்கு பதிலாக ‘பிரசிடெண்ட் ஆஃப் பாரத்’, அதாவது பாரத் குடியரசு தலைவர்  என்ற பெயரில் அச்சிடப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது. அதுபோல பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடர்பான பயண குறிப்பிலும் பாரத பிரதமர் மோடி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மத்தியஅரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்த பெயர் மாற்றம்,  நாடு முழுவதும்  மக்கள் மத்தியில் பெரிய அளவிலான விவாதத்தை உருவாக்கி வருகிறது.

இதுதொடர்பாக  மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், தமிழ்நாடு” என்ற பெயரை மாற்ற முயற்சித்தவர்கள் இப்பொழுது “இந்தியா” என்ற பெயரை மாற்ற முயற்சிக்கின்றனர்.

இந்தியாவைக் கண்டு பிரிட்டீஷாருக்கு பிறகு அதிகம் பயப்படுகிறவர்களாக பாஜக வினர் மாறியுள்ளனர். பெயர் மாற்றத்திற்கு பின்னால் இருப்பது தேசப்பற்றல்ல, தேர்தல் பயம். இந்தியா வெல்லும் என கூறியிருந்தார்.

இதுபோன்று இன்று அவரது பதிவில், அரசியல் சாசனத்தின் முதல் வரியான “இந்தியாவின் மக்களாகிய நாங்கள்” (We, the people of India) மீதே பா.ஜ.கவின் தாக்குதல். இந்தியா என்ற பெயரை மாற்ற ஆகக் கூடிய ரூ 14000 கோடி, தமிழ்நாட்டின் 17 லட்சம் 1 -5 வகுப்பு மாணவர்களுக்கு 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலவுக்கு சமம் என்று தெரிவித்துள்ளார்.