டில்லி:
புதிதாக அமையவுள்ள ஆந்திரத் தலைநகர் அமராவதியின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.11 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியை டில்லியில் இன்று அவர் சந்தித்து பேசினார். ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக உதயமானது. இதன் பிறகு இரு மாநிலத்துக்கும் ஐதராபாத் தாற்காலிகத் தலைநகராக இருந்து வருகிறது.
ஆந்திராவுக்கு அமராவதியை புதிய தலைநகராக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு ஏற்கெனவே ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.