சென்னை: தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.1,056 கோடி நிலுவை வைத்துள்ள மத்தியஅரசு, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிa விடுவிக்காமல் இருந்து வருகிறது. இதனால், ஏ 100 வேலை திட்ட பயனாளிகளுக்கும் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மத்தியஅரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை தராமல் வஞ்சித்து வருவதாகவும், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.1,056 கோடி நிலுவை தொகையை இதுவரை தரவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பயனமடைந்து வருகிறார்கள். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவே 100 நாள் வேலை திட்டத்தை மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது அமல்படுத்தியது. இந்த திட்டம் நாடு முழுவதும் வாழும் ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
ஆனால், இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. அதாவது, பலர் பணிக்கு வராமலேயே சம்பளம் பெறுவதாகவும், மேலும் , பணியாளர்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள சம்பளம் முழுமையாக வழங்கப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால், 100 நாள் வேலை வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் முறைகேடுகளை தவிர்க்கவும் ஆதார் இணைப்பு அவசியம் என்றும் அதன் அடிப்படையிலேயே சம்பளம் வழங்கும் முறையை செயல்படுத்த கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்து சம்பளம் பட்டுவாடா செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறதுமு.
இதற்கிடையில், பல பகுதிகளில், 100நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையான பணிகள் வழங்கப்படுவது இல்லை என்றும், செய்த பணிக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆண்டுக்கு 100 நாள் வேலை திட்டம் என்பது தற்போது படிப்படியாக குறைந்து இன்றைக்கு ஆண்டுக்கு 50 முதல் 60 நாட்கள் வேலை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பணி நாட்களில் பல மாநிலங்களில், நாளொன்றுக்கு ரூ.250 மட்டும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 2022-23 நிதி ஆண்டில் தினசரி ஊதியம் 281 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2023-24 நிதி ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்தின் சம்பளம் 294 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இது ரூ.300 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்த திட்டத்தின்கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் பட்டுவாடா செய்யப்பவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்தியஅரசு, 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு தர வேண்டிய நிலுவை தொயை மதரவில்லை என்றம், அதிகபட்ச நிலுவைத் தொகையானது, தமிழ்நாடு, உத்திரப்பிரதம் மாநிலத்துக்கும் இருப்பது தெரிய வந்துள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு 6,434 கோடி ரூபாயை மத்தி அரசு நிலுவையாக வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் கமலேஷ், நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய தொகையாக ரூ.6,434 கோடி இருப்பதாக தெரிவித்தார்.
இதில் முதல் இரண்டு இடங்களில் தமிழ்நாடும், உத்திரப் பிரதேசமும் உள்ளன. இவ்விரு மாநிலங்களுக்கு மட்டும் நடிப்பு நிதியாண்டில் ரூ.2,867 கோடியை மத்தியஅரசு பாக்கி வைத்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு ரூ.1,652 கோடியும், உத்திரப் பிரதேசத்திற்கு ரூ.1,214 கோடியும் ஒன்றிய அரசு வழங்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே ரூ.12,000 கோடி நிதிப்பற்றாக் குறையில் செயல்படும் 100 நாள் திட்டத்திற்கு தற்போதைய நிதிநிலை அறிக்கையிலும் நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டுவராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஜனவரி 13ம் தேதி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1,056 கோடி நிலுவை தொகையை விடுவிக்குமாறு கேட்டு இருந்தார். அத்துடன் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
இதற்கிடையே 100 நாள் திட்டத்தில் 1.55 கோடி தொழிலாளர்கள் நீக்கப்பட்டு இருப்பதும் பேசும் பொருளாகி உள்ளது. போலியான வேலை அட்டை உள்ளிட்ட காரணங்களால் 2022-23ல் 86 லட்சத்திற்கு மேற்பட்டோரும், 2023-24ல் 68 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர்.