டெல்லி: நாட்டின் அணைகளைப் பாதுகாக்க ரூ.10,211 கோடி நிதி ஒதுக்கீடு: டி.ஆர்.ஐ.பி திட்டத்தின் 2-ம், 3-ம் கட்ட விவரங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் வெளியிட்டார். அதன்படி  DRIP இரண்டாம் கட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத் துறைக்கு ரூ. 510 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு,  பணிகள் நடைபெற்று வருகிறது.

நாட்டில் 19 மாநிலங்களில் 736 அணைகள் புனரமைப்பிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று ஜல் சக்தி துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார். மேலும்,  டி.ஆர்.ஐ.பி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் திட்டத்தின் மொத்த செலவு ரூ.10,211 கோடி என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று  (டிசம்பர் 11ந்தேதி) நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, நீர்வளத்துறை மற்றும் அணைகள் பாதுகாப்பு, புனரமைப்பு தொடர்பான உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதில் அளித்தார். அப்போது கூறியதாவது,

வெளிநாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் (டி.ஆர்.ஐ.பி) இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களுக்கான மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்படி, நாடு முழுவதும் 19 மாநிலங்கள் மற்றும் 2 மத்திய முகமைகள் உட்பட மொத்தம் 736 அணைகள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தத் தகவலை ஜல் சக்தி துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி வியாழக்கிழமை மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார்.

டி.ஆர்.ஐ.பி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் திட்டத்தின் மொத்த செலவு ரூ.10,211 கோடி ஆகும். இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 10 ஆண்டு காலப்பகுதியில் (2021–2031) பயன்படுத்தப்பட உள்ளது. இரண்டாம் கட்டத்திற்கான செலவு ரூ.5,107 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டத்திற்கான செலவு ரூ. 5,104 கோடி ஆகும்.

இந்தத் திட்டத்திற்கு உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏ.ஐ.ஐ.பி) மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்படி, DRIP, இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் திட்டத்தின் மொத்தச் செலவு ரூ. 10,211 கோடி ஆகும். இந்த ஒதுக்கீடு 19 மாநிலங்கள் மற்றும் 3 மத்திய முகமைகளை உள்ளடக்கியது, இது 10 ஆண்டு காலப்பகுதியில் (2021–2031) பயன்படுத்தப்பட உள்ளது. இதில், இரண்டாம் கட்டத்திற்கான செலவு ரூ. 5,107 கோடி, அதே சமயம் மூன்றாம் கட்டத்திற்கான செலவு ரூ. 5,104 கோடி ஆகும்.

இந்தத் திட்டத்திற்கு வெளியில் இருந்தும் நாட்டின் பங்களிப்பும் சேர்ந்து அளிக்கப்படுகிறது. பொது வகை மாநிலங்களுக்கு: 70:30 என்ற விகிதத்திலும், சிறப்பு வகை மாநிலங்களுக்கு: 80:20 என்ற விகிதத்திலும், மத்திய முகமைகளுக்கு: 50:50 விகிதத்திலும் நிதி பங்களிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

பொது வகை மாநிலங்களுக்கு 70:30 என்ற விகிதத்திலும், சிறப்பு வகை மாநிலங்களுக்கு 80:20 என்ற விகிதத்திலும், மத்திய முகமைகளுக்கு 50:50 என்ற விகிதத்திலும் நிதி முறை பின்பற்றப்படுகிறது. நவம்பர் 30, 2025 நிலவரப்படி, DRIP இரண்டாம் கட்டத்தின் கீழ் 31 அணைகளில் முக்கிய உடல் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

டி.ஆர்.ஐ.பி இரண்டாம் கட்டத்தின் கீழ், அணைகள் உடைவதைத் தடுக்கும் வண்ணம், ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளை (இ.டபிள்யூ.எஸ்) நிறுவுதல் மற்றும் அவசரச் செயல் திட்டங்களைத் (இ.ஏ.பி) தயாரிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாநிலங்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், அணைகள் உடைவதற்கான பகுப்பாய்வுகள் மற்றும் அணை சார்ந்த இ.ஏ.பி-கள் உருவாக்கத்திற்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

முதல் கட்டத்தின்போது (2012–2021), தமிழ்நாடு (85), கேரளா (51), கர்நாடகா (22) உட்பட ஏழு மாநிலங்களில் மொத்தம் 210 அணைகளுக்கு EAPகள் தயாரிக்கப்பட்டன. தற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் 12 அணைகளுக்கான இ.ஏ.பி-கள் தயாராகி உள்ளன. புனரமைப்பிற்காக அதிக அணைகள் அடையாளம் காணப்பட்டுள்ள மாநிலங்களில் ராஜஸ்தான் (189), மகாராஷ்டிரா (167), கர்நாடகா (41) மற்றும் உத்தரப் பிரதேசம் (39) ஆகியவை அடங்கும்.

தமிழ்நாட்டில் (நீர்வளத் துறை மற்றும் மின் உற்பத்தி கழகம் இரண்டும் சேர்த்து) மொத்தம் 59 அணைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  நவம்பர் 15, 2025 நிலவரப்படி, DRIP இரண்டாம் கட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத் துறைக்கு ரூ. 510 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் ரூ. 277.35 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்திற்கு (TNGECL) ரூ. 260 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ. 148.32 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு  ஜல் சக்தி துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி மக்களவையில் வழங்கினார்.

[youtube-feed feed=1]