டில்லி
தகவல் அலுவலகம் அளித்த தகவலின்படி கடந்த 5 வருடங்களில் மத்திய அமைச்சர்களின் இல்லங்களை புதிப்பிக்க ரூ.93.89 கோடியும் புது பர்னிச்சர்கள் வாங்க ரூ.8.11 கோடியும் செலவானது தெரிய வந்துள்ளது.
தற்போதைய பாஜக அரசில் பிரதமர் மோடி உட்பட 70 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் 25 பேர் கேபினட் அமைச்சர்கள் ஆவார்க்ள். மற்றும் 11 தனித் துறை பொறுப்பு ஏற்றுக் கொண்ட இணை அமைச்சர்கள் உள்ளனர். மீதமுள்ள 34 பேர் இணை அமைச்சர்கள் ஆவார்கள். இவர்களுக்கு மத்திய அரசு டில்லியில் இல்லங்கள் அளித்துள்ளன.
இந்த இல்லங்களின் பராமரிப்பு, புதுப்பித்தல் ஆகிய பணிகளை மத்திய பொதுப்பணித்துறை கவனித்து வருகின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அமைச்சர்கள்ன் இல்லங்களுக்கான புதிப்பித்தலுக்கான செலவுகள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கிழ் வினா எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு தகவல் ஆனையம் பதில் அளித்துள்ளது.
அந்த தகவலில் 2014 -15 முதல் 2018-19 ஆம் வருடம் வரையிலான மொத்த செலவுகளின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் புதுப்பித்தலுக்காக மொத்தம் ரூ.93.89 கோடியும், பர்னிச்சர்களுக்காக ரூ.8.11 கோடியுமாக ரூ.101.8 கோடி ரூபாயுமாக செலவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஒவ்வொரு அமைச்சர் இல்லங்களுக்கும் செலவான தொகை குறித்து கேட்ட கேள்விக்கு தகவல் ஆணையம் விடை அளிக்கவில்லை.