கொல்கத்தா: ரூ.10,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பவில்லைஎன இந்தியன் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2016-ம்ஆண்டு திடீரென பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் தங்களிடம் இருந்த பணத்தை மாற்ற கடும் அவதிப்பட்டனர். இதைத்தொடர்ந்து புதிய ரூ.500, ரூ. 2000 நோட்டுக்கள்  அறிமுகப் படுத்தப்பட்டன.  இந்த பணம் புழக்கத்தில் இருந்து வந்த நிலையில், 2023ம் ஆண்டு மே 19ந்தேதி, ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ்வங்கி திடீரென அறிவித்தது. இது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யவும், மாற்றிக் கொள்ளவும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம்  வழங்கியது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர். பின்னர், அந்த அவகாசம் முடிந்த நிலையில், அதற்கான அவகாசம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு,  அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தனிநபர்கள், தாங்கள் வைத்துள்ள ரூ.2,000 நோட்டுக்களை நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி கிளைகளில் செலுத்தி தங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாகஅக்டோபர் தொடக்கத்தில் பேசிய செய்தியாளர்களிடம்  ஆர்பிஐ கவர்னர்,  ரூ.2,000 நோட்டுக்களில் 87 சதவீதம் வங்கிக்கு டெபாசிட்டாக திரும்பிவிட்டது என்றும், மீதிப் பணம் நாடுமுழுவதும் மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் டெல்லியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சக்திகாந்த தாஸ்‘‘ ரூ.2,000 நோட்டுக்கள் வங்கிக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. ரூ.10,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுக்கள் இன்னும் மக்களிடத்தில் உள்ளன. அவை வங்கிக்கு திரும்ப வரும் என எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்து உள்ளார்.