சென்னை: அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ்உள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், திருக்கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக் கொடை ரூ.1,000 வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட முதுநிலை மற்றும் முதுநிலை அல்லாத அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது.
2019- 2020-ம் ஆண்டு 240 நாட்களும் அதற்கு மேலும் பணிபுரிந்த பணியாளர்களுக்கு கருணைக் கொடையாக ரூ.1,000-மும், 6 மாதத்திற்கு மேல் 240 நாட்களுக்குள் பணியாற்றிய பணியாளர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இத்தொகை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.