சென்னை: இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஆட்சியை கைப்பற்றியதும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம், நிதிநிலை காரணமாக இதுவரை செயல்படுத்தப்படாத நிலையில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளைத் தொடர்ந்து, 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப் படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனால் இந்த திட்டத்தை இல்லத்தரசிகள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கினறனர். இந்த நிலையில், மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் யார் யாருக்கு இத்தொகை வழங்குவது என்பது குறித்தும் அவ்வப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதற்காக ரூ.7ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாகவும், சுமார் 1 கோடி இல்லத்தரசிகள், இந்த திட்டத்தின் வாயிலாக பலன் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மகளிர் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை கோட்டையில் நிதி அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கும் முதலமைச்சர், தொடர்ந்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை பிற்பகலில் காணொளி வாயிலாகவும் ஆலோசனை நடத்துகிறார்.
இதற்கிடையே மகளிர் ரூ.1000 உரிமைத் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
monthy-rs-1000-scheme-for-women-cm-mk-stalin-consulting-tomorrow-632119