வேலூர் :
ரூ.1000கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க நடைபெற்ற முயற்சியை தொடர்ந்து, வேலூரில் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வேலூரில் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறு வனம் உள்ளது. இவர்களுக்கு மேலும் பல நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சமீபத்தில், ரூ. 1000 கோடி மதிப்புள்ள நிலத்தை கைப்பற்றும் முயற்சியில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
தற்போது ஜாமினில் உள்ள அவர்களின் நிறுவனங்களில் வருமனா வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.