சென்னை: அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் தலா ரூ.1000 உதவி வழங்கும் வகையில், புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தை வரும் 30ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் . தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் இனி மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதன்படி, ‘2024-25ம் கல்வியாண்டு முதல், தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயின்று உயர்கல்வியில் முதலாம் ஆண்டு, 2ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தை வரும் 30-ந்தேதி தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம், அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் இனி மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும்.
முன்னதாக, அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022ம் ஆண்டு செப்டம்பர் 5ந்தேதி தொடங்கிவைத்தார். இந்த தொகையை மாணவிகள் கல்விக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
தமிழக அரசின் சமூக நலத்துறைசார்பில், ‘புதுமைப்பெண்’ என்றபெயரில் மூவலூர் ராமாமிர்தம்அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.
சென்னை பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், தமிழகம் முழுவதும் 26 தகைசால் பள்ளிகளையும், 15 மாதிரிப் பள்ளிகளையும் தொடங்கிவைத்தார். இரு முதல்வர்களும் சேர்ந்து, சென்னையில் 2,500 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய புதுமைப்பெண் பெட்டகப்பை, வங்கி டெபிட்கார்டு ஆகியவற்றை வழங்கினர்.மாதந்தோறும் 7-ம் தேதி மாணவிகளின் வங்கிக்கணக்கில் இந்த உதவித் தொகை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாதம் மட்டும், திட்ட தொடக்க விழாவையொட்டி நேற்றே மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டது.