வாணிம்பாடி: பெண்களுக்கான திமுக அறிவித்த ரூ.1000 உதவித்தொகை இன்னும்  6 மாத காலத்திற்குள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர்மாவட்டம்,காட்பாடி அடுத்த வள்ளிமலையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் துரைமுரகன், அங்கு பாலேகுப்பம் கிராமத்தில் ரூ.13.80 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடையை திறந்து வைத்தார்.  அதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவியும் வழங்கப்பட்டது.

பின்னர் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், தமிழக அரசு கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவி தொகையை வழங்கியது. அதே போல் தேர்தலின் போது கூறியதை போல் மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருகிறது. இன்னும் 6 மாதகாலத்தில் மகளிர்களுக்கு ரூ.1000 மாத உதவி தொகை வழங்கும் திட்டம்  தொடங்கப்படும்,  தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நான் செய்து தருவேன் என்றும் கூறினார்.

[youtube-feed feed=1]