ஜினிகாந்த் கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு 2 நாட்களுக்கு முன் லம்போர்கினி காரில் சென்றார். முகத்தில் மாஸ்க் அணிந்து அவரே காரை ஓட்டிச் சென்றார்.
சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாக வும் இ பாஸ் எடுக்காமல் சென்றதாகவும் மாநகராட்சிக்கும், போக்குவரத்து போலீ ஸுக்கும் புகார் சென்றது. சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதற்காக அவருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக் கப்பட்டது அவரது பெயரில் அபராதம் கட்டிய ரசீது நகல் இணைய தளத்தில் வெளியாகி வைரலானது.

இ பாஸ் வாங்காதது பற்றி ரஜினி வெளி யிட்டுள்ள மெசேஜில். ‘நான் E – Pass இல்லாம பண்ணை வீட்டுக்கு போனதை எல்லாரும் உங்க வீட்டு பிள்ளையா நினச்சு மன்னிச்சிருங்க’ என ரஜினி தெரிவித்தி ருக்கிறார்.

ரஜினி தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு முடிந்த பின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

[youtube-feed feed=1]