கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலத்தில் ரூ. 100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை, விஷம் முறிவு மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால் பாம்பு விஷத்துக்கு அதிக அளவில் மவுசு ஏற்பட்டுள்ளது. இதற்காக சில சமூக விரோதிகள் பாம்புகளை பிடித்து அதன் விஷத்தை எடுத்து கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் பாராசாத் பகுதியில் ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது. பாம்பு விஷத்தை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக 3 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.