புதுச்சேரி:
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மாநில முதல்வர் நாராயணசாமி நிவாரணம் அறிவித்து உள்ளார்.
அதன்படி, கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கையின்போது, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, இழப்பு ஏற்பட்டால், அவர்கள் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாதிக்கப்படுவோருக்கு ரூ.2 முதல் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,761 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 239 பேர் உயிரிழந்த நிலையில், 643 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மாஹே பகுதியைச் சேர்ந்த கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மாநிலத்தில் மொத்தம் 5 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 71 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதுதான் புதுச்சேரி மாநிலத்தில் முதல் பலி என்பது குறிப்பிடத்தக்கது.