சென்னை: வியாசர்பாடியில் உள்ள பழம்பெரும் சிவன் கோயிலான ரவீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள 8 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்ததும், அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு நியமிக்கப்பட்டார். ஆன்மிகவாதியான அவர், ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவினைத் தொடர்ந்து மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படிடி, மாநிலம் முழுவதும் தமிழகத்தில் அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட இந்து கோவில்களுக்கு சொந்தமான பதிவேடுகளைக் கொண்டு, கோயில் சொத்துக்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றன. கோவில் கோவில்களுக்கு சொந்தமான 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரையறுக்கப்பட்டு அத்துமால் கல் நடும் பணி நடைபெற்று வருகிறது.
வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சுவாமி சிலைகளில் இதுவரை 872 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 2500 கோடி மதிப்பிலான கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னை வியாசர்பாடியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 8 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இரவீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோயிலுக்கு சொந்தமாக வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவில் குளம் உட்பட 21 கிரவுண்ட் உள்ளது. 21 கிரவுண்டில் முற்கட்டமாக 8 கிரவுண்ட் நிலம் மீட்க்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது.