சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மத்திய அரசின் வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை குளறுபடி காரணமாக, சென்னையில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு இந்திய வானிலை மையத்தின் சென்னை பிரிவில் உள்ள ரேடார் செயல்படாததே காரணம் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தமிழக அரசு, வானிலை குறித்த முன்னெச்சரிக்கைகளை  கணிக்க ரேடார் உள்பட எச்சரிக்கை அமைப்பு களுக்கு ரூ.10கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்.

வருவாய் பேரிடர் மேலாண்மை துறை குறித்த அறிவிப்புகளில், வானிலை முன்னறிவிப்பு குழப்பத்தை தடுக்க ரூ.10 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாகவும், சென்னையின் வெள்ள தடுப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

வானிலையை துல்லியமாக கணிக்க, பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை மேற்கொள்ள அண்மையில் சென்னை வெள்ளப்பெருக்கு நமக்கு உணர்த்தியது.  இதன் காரணமாக, பேரிடர் தாக்கும் முன்பு எச்சரிக்கையை வழங்க 2 வானிலை ரேடார், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மானிகள், 11 தானியங்கி நீர்மட்ட கருவிகள், அதிவேக கம்யூட்டர்கள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பு உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் வெள்ள பாதிப்பை தடுக்க தக்க பரிந்துரை வழங்கும் வகையில் ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இக்குழுவின் பரிந்துரைப்படி வெள்ள தடுப்பு பணி முதற்கட்டமாக ரூ.1000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு நிலங்களில் நில அளவை துல்லியமாக மேற்கொள்ள தொடர்ந்து இயங்கும் தொடர்பு நிலையங்கள் வலுப்படுத்தப்படும். நவீன முறையில் நில அளவை பணிகளை மேம்படுத்த நில அளவையாளர்களுக்கு ரோவர் கருவி வாங்கப்படும். இதற்கு ரூ.15 கோடி வழங்கப்படுகிறது.

பரவலான சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அரசு நிலங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசு நிலங்களை குத்தகைக்கு விடுவதில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், விரிவான நில குத்தகைக்கும் கொள்ளை வகுக்கப்படும்.

நீர்நிலைகள், அரசு நிலங்கள் மீதனா ஆக்கிரமிப்புகளை மீட்க அனைத்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.