சென்னை: இந்தியாவிலேயே முதன்முதலாக வானிலையை கணிக்க தமிழகஅரசு மாநில நிதிகளைக்கொண்டு ரேடார் உள்பட முன்னெச்சரிக்கை கருவிகளை நிறுவ உள்ளது. அதற்காக நிதி ஒதுக்கீடும் செய்து பட்ஜெட்டில் அறிவித்து உள்ளது.

தமிழக அரசின் அறிவிப்புக்கு பிரபல வானியல் ஆய்வு நிபுணர் வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

மத்தியஅரசின் வானிலை ஆய்வு மைய குளறுபடி காரணமாக, தமிழ்நாடு வெள்ளம் மற்றும் புயலால் கடுமையான சேதங்களை எதிர்கொள்கிறது. இதற்கு வானிலை ஆய்வு மையத்தில் உள்ள ரேடார் உள்பட கருவிகள் செயல்படாததே காரணம் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தமிழகஅரசே தனியாக ரேடார் போன்ற வானிலை தொடர்பாக முன்னெச்சரிக்கைகளை கணிக்கும் வகையில்  2 வானிலை ரேடார், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மானிகள், 11 தானியங்கி நீர்மட்ட கருவிகள், அதிவேக கம்யூட்டர்கள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பு உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவித்து உள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள், வானியல் நிபுணர்கள், விவசாயிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு வானியல் நிபுணரான தமிழ்நாடு வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான் வரவேற்பு தெரிவிட்டு டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், நாட்டிலேயே முதலாவதாக, ஒரு மாநில அரசு  ரேடார் நிறுவுகிறது. இதன்மூலம் பெரும்பாலான நேரங்களில் அணைக்கப்படும் மாநிலத்தில் இருக்கும் ரேடார்களுடன் ஒன்றிணைக்க முடியும். தருமபுரி, கிருஷ்ண மாநிலத்தில் தற்போதுள்ள ரேடார்களுடன் ஒருங்கிணைக்க முடியும். இதன்மூலம் கடற்கரைக்கும்,  தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை பெல்ட்கள் போன்ற பகுதிகளும் கணிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒரு சாதாரண மனிதனால் வானிலை பார்க்கவும் இப்போது ஒளிபரப்பவும் முடியும்.

என்று கூறி உள்ளார்.

வானிலையை கணிக்க ரேடார் உள்பட எச்சரிக்கை அமைப்புகளுக்கு ரூ.10கோடி ஒதுக்கீடு! பிடிஆர்….