இந்தியா – மேற்கிந்திய டி 20 போட்டி : ரோகித் சர்மாவின் புதிய சாதனை

Must read

புளோரிடா

ந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான நேற்றைய டி 20 போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

புளோரிடா மாகாணத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான நேற்றைய இரண்டாம் டி 20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.  இந்திய அணிக்குத் தொடக்க  வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் அணியின் தொடக்கத்தை விருவிருப்பாக்கினார்கள்.   ஷிகர் தவான் 23 ரன்களிலும் ரோகித் சர்மா 67 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.   இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கட்டுகள் இழந்து 167 ரன்களை எடுத்தது.

அதன் பிறகு களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 15 ஓவர்காளில் 4 விக்கட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்த நிலையில் வானிலை மிகவும் மோசமானதல் ஆட்டம்  நிறுத்தப்பட்டது.  டக்வர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 22 ரன்கள் வித்டியசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.  மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா தொடரைக் கைப்பற்றி உள்ளது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா சர்வதேச டி 20 போட்டிகளில் அதிக சிக்சர்  அடித்து புதிய சாதனை ஏற்படுத்தி உள்ளார்.  அது மட்டுமின்றி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி 20 பந்தயங்களில் 400 ரன்களை கடந்து இவ்வகை போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதிக ரன் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

More articles

Latest article