வெலிங்டன்: ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, சச்சின் டெண்டுல்கரை விட, ரோகித் ஷர்மாவே சிறந்த பேட்ஸ்மேன் என்று ஒப்பீடு செய்துள்ளார் நியூசிலாந்தின் முன்னாள் வீரர் சைமன் டூல்.
அவர் கூறியதாவது, “ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் நம்பர் 1 துவக்க வீரர் சச்சினா அல்லது ரோகித்தா? என்று என்னிடம் கேட்டால், எனது சாய்ஸ் ரோகித் ஷர்மாதான். இதற்கு புள்ளி விபரங்களே சாட்சி.
சராசரி ரன்கள் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில், சச்சினை எளிதாக முந்துகிறார் ரோகித் ஷர்மா. 60, 70 மற்றும் 80 ரன்களை எட்டிவிட்டால், இவரின் ஸ்ட்ரைக் ரேட் அதிகரித்துவிடும். 90 ரன்களை எட்டிவிட்டு, சதத்தைத் தொடுவதற்கு தடுமாறியதெல்லாம் கிடையாது. சாதாரணமாக எட்டிவிடுவார்” என்றுள்ளார் சைமன் டூல்.
கடந்த 2007ம் ஆண்டில் மட்டும், 90 ரன்களில் 6 தடவையும், 99 ரன்களில் 3 முறையும் அவுட்டானார். பொதுவாகவே, 90 ரன்களைக் கடந்து 100 ஐ எட்டும்போது சச்சின் திணறுவான் என்ற விமர்சனம் அவர்மீது நீண்டகாலமாகவே உண்டு.
ஆனால், ரோகித் ஷர்மா அந்த விஷயத்தில் வேறுமாதிரி. சதத்தை நெருங்கும்போது தடுமாறுவதெல்லாம் கிடையாது. இந்த அடிப்படையில் பேசியிருக்கலாம் சைமன் டூல்.