
மியான்மரில் இருந்து வெளியேறி வங்க தேசத்தில் தஞ்சமடைய சென்ற ரோஹிங்கியா மக்கள் சென்ற படகு கவிழ்ந்துவிபத்துக்குள்ளாது. இதில் அந்த படகில் பயணம் செய்த 60 பேர் பலியாகி உள்ளனர்
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம் மக்களுக்கு எதிரான ராணுவத்தின் தாக்குதல் தீவிர மடைந்து வருவதால், அங்கிருள்ள ரோஹிங்கிய இன மக்கள் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், மியான்மரில் இருந்து வெளியேறி வங்கதேசத்தில் தஞ்சமடைய 2 படகுகளில் ரோஹிங்கியா மக்கள் சென்றனர். அந்த இரண்டு படகுகளு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
[youtube-feed feed=1]