நம்பி நாராயணின் சாதனையும், அவர் சந்தித்த சவால்களையும் மையமாகக் கொண்டு ‘ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்’படம் உருவாகியுள்ளது .
இப்படத்தை மாதவனே இயக்கியிருக்கிறார். இப்படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு சிம்ரன் மற்றும் மாதவன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார் . சூர்யா பத்திரிக்கையாளராக நடித்துள்ளார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாதவனை பேட்டி காண்கிறார் நடிகர் சூர்யா. மேலும் நம்பி நாராயணன் எதிர்கொண்ட சவால்கள், சோதனைகள் உள்ளிட்டவையும் ட்ரெய்லரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரெய்லரின் ஒரு காட்சியில், ஒரு நாயை கொல்ல வேண்டும் என்றால் வெறி நாய் என்று சொல்ல வேண்டும் அதே ஒரு மனிதனை அடையாளம் தெரியாமல் கொல்ல வேண்டும் என்றால் அவனுக்கு தேசவிரோதி என்று முத்திரை குத்த வேண்டும் என்று அழுத்தமான வசனத்தை பேசியுள்ளார் சூர்யா.