மும்பை: இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைந்து விட்டதால், தற்போதைய தலைமைப் பயிற்சியாளரை மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ராபின் சிங்.
அவர் கூறியுள்ளதாவது; தற்போதைய பயிற்சியாளரின் கீழ், இந்தியா தொடர்ந்து 2 உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகளில் தோற்றுள்ளது. மேலும், டி-20 போட்டிகளிலும் சரியாக சோபிக்கவில்லை.
எனவே, தற்போது 2023ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டிய தருணம் வந்துள்ளது. எனவே, புதிய பயிற்சியாளர் மாற்றம் தேவைப்படுகிறது” என்றுள்ளார். இதன்மூலம் அவர் ரவி சாஸ்திரியின் செயல்பாடுகளை நேரடியாக விமர்சனம் செய்துள்ளார். தற்போது புதிய தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்திருப்போரில் ராபின் சிங்கும் ஒருவர்.
இவர் கடந்த 2007 – 2009 இடைபட்ட காலகட்டத்தில் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்தார். அந்த காலகட்டத்தில் இந்தியா இங்கிலாந்தில் டெஸ்ட் வெற்றியையும், டி-20 உலகக்கோப்பையையும், ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு ஒருநாள் தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.