வெங்கட் பிரபு தயாரிப்பில் , இயக்குநர் சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ், சம்பத், சனா, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘ஆர்.கே.நகர்’.
பைனாஸ் சிக்கலால் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி பல முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது .கடைசியில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிட்டனர் .ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் சர்ச்சை உருவானதால், இணையத்திலிருந்து நீக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ‘பொன்மகள் வந்தாள்’ டிஜிட்டல் வெளியீடு பிரச்சினை ஓடிக்கொண்டிருப்பதால் இந்த சமயத்தை பயன்படுத்தி கொண்டுள்ளனர் படக்குழு.
இன்று (ஏப்ரல் 29) முதல் நெட்ஃபிளிக்ஸ் இணையத்தில் ‘ஆர்.கே.நகர்’ படத்தை அதிகாரபூர்வமாக கண்டுகளிக்கலாம்.