
‘தேவராட்டம்’ படத்தைத் தொடர்ந்து, விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் ‘பேச்சி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் படத்தை இயக்கி வருகிறார் முத்தையா.
இந்தப் படத்துக்குப் பிறகு கார்த்தி நாயகனாக நடிக்கும் படத்தை முத்தையா இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
My next movie with director @dir_muthaiya 😍 pic.twitter.com/jCEzFMOq1H
— RK SURESH (@studio9_suresh) October 15, 2020
இதனிடையே, ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கும் படமொன்றை இயக்கவுள்ளார். முத்தையா. இதனை ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்த ‘மருது’ படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் ஆர்.கே.சுரேஷ்.