சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத் தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில், ஜெயலலிதா  போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.
அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி சேலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்ிதல்  வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு  நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார்.  இவ்வழக்கில் ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் பி.குமார் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து நீதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டார்.

உயர்நீதி மன்றம் - ஜெயலலிதா
உயர்நீதி மன்றம் – ஜெயலலிதா

 
இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நேற்று பிறப்பித்தார். அந்த தீர்ப்பில், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்கும்படியாக இல்லை. எனவே, இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி  செய்கிறேன் என்று  தெரிவித்தார்.
ஆகவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வெற்றி செல்லும் என்று தீர்ப்பாகி உள்ளது. அத் தேர்தலுக்குப் பிறகு பொதுத் தேர்தல் நடந்து, அதே ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்ர ஜெயலலிதா, முதல்வராகவும் பொறுப்பேற்று தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.