பாட்னா: பீகார் மாநிலத்தில் I.N.D.I, கூட்டணி தொகுதி பங்கீடுகள் இறுதியானது. அதன்படி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. பீகார் மாநிலத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது,
அதன்படி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி 26 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
பீகாரில் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணில் நிதிஷ் குமார் கட்சி, மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இடம் பிடித்திருந்தன. 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியிருந்தது. இந்த முறையும் இதே கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. ராம் விலாஸ் பஸ்வான் மறைந்த பிறகு, அந்த கட்சியில் இருந்து பிரிந்து பசுபதி பராஸ் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
இதற்கிடையில், இண்டியாக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை (26ந்தேதி) பாட்னாவில் உள்ள காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் இல்லத்தில் ஆர்ஜேடி கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றம் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து, பீகாரில் மக்களவைத் தேர்தலில் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு நிறைபெற்றுள்ளது.
அதன்படி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி 26 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.